Thursday, 3 November 2016

Cardinal rules of Christian Life final part

எந்நேரத்திலும் யேகோவா என்னும் நாமமுள்ள பிதாவாகிய தேவனை மாத்திரம் முன்னிறுத்தி, அவரை மட்டுமே மகிமை படுத்தி, ஆவியானவரின் வழிநடத்துதலின் படி ஒவ்வொரு கணநேரமும்  இயேசுவின் நற்செய்தியை வாழ்ந்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களே தேவ ஜனம் என்றழைக்கப்பட தகுதியுள்ளோர்.

People who, In every circumstances keeping LORD Yahweh first and Glorify the Father in heaven and lead their life as led by the Holy Spirit and thus living Christ like life, are the only people who could qualify to be called as Lord's people.

தேவன் நம்மை இப்படி வனைய, குயவன் கையில்  ஈரக் களிமண்ணாக நம் வாழ்வை ஒப்புக் கொடுப்போம்.

Let us surrender and submit our lives to the LORD as a wet clay in potters hand

எந்தவொரு நிலையும் தேவனுக்கு பெரிதானதல்ல... நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. நம் இரட்சகர் சொல்கிறார் "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்"

No situation is greater than our LORD. Nothing is impossible for the Lord. Our redeemer says "Anything is possible for the one who believes".

என்னே ஒரு வாக்குதத்தம்! தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை! விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்!

What a Promise!

Nothing is impossible for the LORD.

"Anything is possible for the one who believes"

அல்லேலூயா!
Hallelujah

நம்மிடத்தில் இயேசு பெரும் விசுவாசத்தை கேட்கவில்லை. கடுகு விதையளவு விசுவாசமே கேட்கிறார்.

Jesus doesn’t expect great faith. He says faith as little as mustard seed is enough.

ஆக விசுவாசம் மட்டும் இருந்தால் போதுமா?

Is faith suffice?

நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, உம்மால் இதை செய்யக் கூடும் ஆண்டவரே, ஜெபத்தை கேட்டருளும் என்று முட்டி மோதி ஜெபிக்கும் மக்களின் மத்தியில், என் தேவன் எனக்கு என்ன கொடுக்க சித்தமாயிருக்கிறாரோ, அது என்னை வந்தடையும். என் பணி அவர் சித்தத்தை செய்து முடிப்பதே என்று கிரியைகளை செய்வோர் எத்துனை?

"I have faith Lord. I beleive you can do this. Hear our prayers O Lord. " such are the umpteen people who pray and in middle of such believers, how many are there to say, "WHATEVER LORD HAS DESTINED FOR ME SHALL COME TO PASS! MY JOB IS TO ACCOMPLISH HIS WILL. SO I WILL CONTINUE TO DO HIS WILL"

இதோ என் ஆத்துமாவை வாங்கத் தேடுகிறார்கள், என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும் என்று சூரைச்செடியின் கீழ் படுத்திருந்த எலியாவை இரண்டு முறை எழுப்பி ஆகாரம் கொடுத்து,
ஆவியானவர் நடக்கச் சொன்னார், நாற்பது நாள் ஆகாரம் கூட இல்லாமல் நடக்கும் எலியாவின் கிரியையை நினைவு கூருங்கள்.

Remember Elijah's murmur? He was fleeing Jezebel and rested under a broom tree. Angel woke him twice to feed him. Then Lord asks him to walk 40 days, without food, till the Horeb mountain.

யெசபேலை விட கர்த்தருடைய கரம் குறுகியதோ? ஆயினும் ஒரு பரதேசியைப் போல தேவ ஆவியானவர் சொன்னதால் நாற்பது நாள் ஆகாரமில்லாது ஓரேப் மலை வரை நடந்த எலியா. கடுகளவு விசுவாசம் எனக்குள் உள்ளது. ஆகையால் என்ன தீங்கு என்னை மேற்கொள்ளும். இதோ இப்போது தானே அக்கினியால் உத்தரவு கொடுத்தார் தேவன். நான் ஏன் ஓட வேண்டும் என்று அவன் கேட்டானா?

Was LORD'S hand smaller than Jezebel's? Why should Elijah flee her like an urchin? Did he ask, 'Oh I have faith as big as mustard seed. Just a few days back I had received answer in Fire from the LORD.  Why should I run?'

ஓடியதாலே கர்த்தருடைய மகிமையை, அவர் முன்செல்லும் சமூகத்தை கண்டான். ஆயினும் கர்த்தர் என்ன சொல்லுகிறார், "பாகாலை ஆராதனை செய்யாத ஏழாயிரம் பேர் இஸ்ரவேலில் வைத்திருக்கிறேன்"

Because he obeyed he saw the LORD’S PRESENCE. Yet to his murmur LORD answered "I have kept 7000 who does  not worship Baal"

ஐயா... அதெல்லாம் மிகப் பழைய நிகழ்வுகள் என்று நினைக்கிறீர்களா, புதிய ஏற்பாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன. ஒன்றைக் காண்போம்.

Oh sir... these were very old occurences... if you think that, there are many occutences in new testament period. Let's see one such.

இயேசுவின் வாழ்க்கையில் பார்க்கிறோம்.... திமிர்வாதக்காரனை சுமந்து வந்த மனிதரின் விசுவாசத்தை இயேசு பார்க்கிறார். விசுவாசத்தை மட்டுமல்ல, தூக்கிக் கொண்டு கூரையை பிரித்து இறக்கும் கிரியையையும் பார்க்கிறார்.

Jesus sees the belief of the men who carried the invalid to him. They took away the roof tiles to lower the invalid so that Jesus could heal him. Jesus saw the action of these men who lowered the invalid.

என் வாழ்க்கை, என் குடும்பம், என் ஆசீர்வாதம், நான் இயேசுவை காணவேண்டும், நான் அவர் உபதேசத்தை கேட்டால் போதும், என அந்த வீட்டில் கூடியிருந்த மக்கள் நினைத்த போது, 'இவன் எப்படி போனால் எனக்கென்ன?', என்று விடாமல், கூரையை பிரித்தேனும் இறக்குவோம் வாருங்கள்... இவன் சுகமாக வேண்டும்... என்ற விசுவாசக் கிரியையை கண்ட இயேசு குணமாக்குகிறார்.

The crowd who had gathered there were more selfish for themselves, their family, let me hear teachings from Jesus. However the men who carried the invalid were selfless. Whatever it takes, even if we have to dismantle the roof tiles, the invalid needs healing. Jesus saw these action of faith.

யாக்கோபின் நிரூபத்தில் படிக்கிறோம் "கிரியை இல்லா விசுவாசம் செத்த விசுவாசம்" யாக்கோபு விசுவாசத்தின் தகப்பன் என்று போற்றப்படும் ஆபிரகாமே கிரியையினால் நீதிமானாக்கப் பட்டான் என்று எழுதியிருப்பதை காணுங்கள்.

In the epistle of James we read "faith with out deeds is dead" He even explains how The father of faith, Abraham was made righteous by his deeds.

இதே போல் பற்பல உதாரணங்கள் உண்டு.

There are many such examples like this.

ஆக, தேவ பிள்ளையே, தேவ சித்தத்தை கேட்டு, அப்படியே ஆகுமென விசுவாசித்து, தேவனே இந்த சித்தத்தில் என் பங்கு என்ன என்று கேட்டு அதற்கு கீழ்படிந்து கிரியை செய்வதே தேவ பிள்ளைகள் வாழ்வில் இன்றியமையாதது.

Hence, Child of God,

Knowing LORD’S will,
Believing that it shall come to pass and
Asking the Lord whats my part in it and obeying the Lord

are the three cardinal rules.

பிதாவின் சித்தம் செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான். இது இயேசுவின் சத்திய வாக்கு.

JESUS has said, Only the Ones who does the Father's will shall enter the Kingdom of Heaven.

பிதாவின் சித்தம் செய்ய ஒப்புக் கொடுங்கள். அவர் என்ன செய்யச் சொன்னாலும் கீழ்படிந்து செய்யுங்கள்.

Submit yourself to do the LORD'S will. Whatever He says, OBEY.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

May LORD bless you. Amen.

No comments:

Post a Comment