Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 2

இயேசு கிறிஸ்து ஏன் 33-1/2 வருடங்கள் வாழ்ந்தார் என்று தியானிக்க கூறியிருந்தேன்.

சில காரணங்களை இப்போது காணலாம்.

1. அவரைக் குறித்த தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டும். ஆய்வாளர்கள் கூறுகின்றனர் பற்பல தீர்க்கதரிசனங்கள் அவர் வாழ்க்கையில் நடந்தேறின. ஆதியாகமம் 3:15ல் தேவன் கூறிய பெண்ணின் வித்து தீர்க்கதரிசனம் முதல், யோவான் ஸ்நானகன் தந்தையான சகரியாவின் அருணோதயம் வரை அவரில் நிறைவேறின.

355 தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றம் இந்த தளத்தில் காண்க. ஆங்கிலத்தில் இருந்தாலும், வேத வசனங்களை தமிழில் படித்தால் நிச்சயம் புரியும்.   http://bit.ly/1tIYobM

மற்றும் இந்த தளத்தில் 16 நிறைவேறிய தீர்க்கதரிசன வாக்குகளின் விளக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. இதனையும் படித்து உணருங்கள். http://bit.ly/2eOCYZ8

2. அவர் எல்லா மனிதர்கள் போலவே சோதிக்கப் பட வேண்டியிருந்தது. பழுதில்லாத ஆட்டுக்குட்டியாக அவர் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. எபிரேயர் 4:15 "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்."

3. தேவன் முன்குறித்த வேளையில், காலம் நிறைவேறின போது பாவ பலியாக தன் குமாரனை ஒப்புக் கொடுத்தார். கலாத்தியர் 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

காலம் நிறைவேறின போது அவர் வந்தாரென்றால், காலம் நிறைவேறின போது தானே ஒப்புக் கொடுக்கப்பட்டார்?

இன்னும் பல காரணங்கள் உள்ளன. தேவ ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்த மன்றாடுங்கள்.

அடுத்த பதிவிலிருந்து இயேசுவின் போதனைகளையும் அவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் காணலாம்.                 

No comments:

Post a Comment