Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 4

தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றென பலர் பிரசங்கிப்பர்.

இயேசு இரண்டு வாக்கியங்களையும் தன் பிரசங்கத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார். நான் படித்த ஒரு வலைப்பதிவில் இயேசு முதலில் பரலோக ராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று சொல்லி ஆரம்பித்தார், பிறகு பெருவாரியான மக்கள் அவ்வசனத்தை ஏற்றுக் கொண்டப் பின்னர் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது என்று திரித்தார். இது ஒரு விற்பனை தந்திரமே என்று குறிப்பிட்டுருந்தார்.

தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றென நீங்களும் கருதினீர்களானால் இந்த மனுஷனுக்கும் உங்களுக்கும் வேறுபாடு என்ன?

தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தியது யாதெனில், தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டும் வேறு. ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டும் வேறு.

மிகப் பெரிய ஒற்றுமை

தேவனே இரண்டிலும் ஆளுகை செய்கிறார்

உயிர்த்தெழுந்த விசுவாசிகளும், மறுவருகையில் எடுத்துக்கொள்ளப் பட்ட விசுவாசிகளும் பூமியை ஆயிரம் ஆண்டு ஆள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே, அதுவே பரலோக ராஜ்யம். அது சமீபித்திருக்கிறது. ஆட்டுக்குட்டியானவர் நமது ராஜாவாக, விசுவாசிகள் அவரின் ராஜரீகத்தில் பங்குள்ளவர்களாக ராஜரீகம் செய்வோம்.

இந்த ஆயிரம் வருட ஆட்சியில் நம்பிக்கை இல்லாதவர்கள் தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றெ கூறுவர்.

தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன?

இயேசு சொல்கிறார், அது இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்றில்லாத படி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே!

விசுவாசிகள் தேவன் ஒருவரே கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜா என்று விசுவாசிக்கும் போது, நம் இருதயங்களில் தேவனுடைய ராஜ்யம் நிலைத்து இருக்கிறது.

"கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்" என்று அறிக்கையிடும் போது அவ்விடத்தில் தேவனுடைய ராஜ்யம் வருகிறது.

ஒவ்வொரு நாளும் கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் என்று அறிக்கை செய்து உங்கள் நாளை தொடங்குங்கள். அவ்வாறு செய்யும் போது தேவனுடைய ராஜ்யத்தில் நீங்கள் வாழுகின்றீர்கள்.

ஆயிரமாண்டு கிறிஸ்துவின் ஆட்சியில் அரசனாக கோலோச்சுவேன் என்றும் அறிக்கை செய்யுங்கள். அப்படி செய்வதால் இயேசுவின் வருகையின் மேல் உள்ள விசுவாசத்தில் நீங்கள் உறுதிப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்களை மேலும் ஆழமான புரிதலுக்குள் வழிநடத்துவாராக. ஆமென்

No comments:

Post a Comment