Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 5

போதனையில் உவமைகள்

இயேசு பெரும்பாலும் தன் போதனைகளை சீஷர்களுக்கு சொன்னதாகவே எழுதப்பட்டிருக்கிறது. பரிசேயன் நிக்கொதெமூ போன்றோர் விதிவிலக்கு.

மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள மலைப் பிரசங்கத்திலும், லூக்கா சுவிசேஷத்தில் உள்ள சமபூமி  பிரசங்கத்திலும் சீஷர்கள் நோக்கியே பிரசங்கம் செய்ததாகக் காண்கிறோம்.

மத்தேயு 5:1-2

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்

லூக்கா 6:20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து

மக்களிடம் பேசும் போதோ உவமைகள் பலவால் போதகம் செய்தார் என்பதைக் காண்கிறோம்.

தேவ குமாரன் உவமைகளால் ஏன் போதிக்க வேண்டும்? 

இப்போது உள்ள சுவிசேஷம் அறிவிப்பவர்கள் போலே நேரடியாக பேசியிருக்கலாமே! என்னை விசுவாசியுங்கள், விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைவீர்கள் என்று ஆலயத்திலும், பண்டிகையிலும் மட்டும் பேச வேண்டியது ஏன்?

மாம்சத்தில் உள்ள மக்கள் ஏதோ ஒரு தேவைக்காகவே தேவனிடத்தில் வருவது வழக்கம். சபை கூடி வருதல் என்பதை நியாயப்பிரமாணமாக செய்தார்களேயன்றி தேவனையும் அவர் ராஜ்யத்தையும் தேட வேண்டும் என்று அவர்கள் வராதது உண்மை.

உவமைகளில் பேசிய போது சீஷர்கள் கேட்கின்றனர், "ஏன் உவமைகளால் பேசுகிறீர்?" இயேசு தரும் பதிலை காணுங்கள்

"தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது."


ஆக எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற கோட்பாடு இயேசுவின் போதனையில் இல்லை. அவனவனுக்கு என்ன அருளப்படவேண்டும் என்று தேவன் முன்குறித்திருக்கிறாரோ அதுவே அருளப்படும். 

விதைப்பான் உவமையில் விதையில் வேறுபாடில்லை. விதைத்த மனுஷகுமாரனும் விதை கெட்டுப்போக வேண்டும் என்று கல்லிலோ முட்களிலோ பொடுவதில்லை, அவனவன் கேட்டு உள்வாங்கி பயன் பெறும் வகையில் தான் வேறுபாடு. நல்ல மண்ணான விசுவாசிகளும் ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்.

இதைத் தான் பவுல் 1 கொரிந்தியர் 3:10-13ல் கூறுகிறான்

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

நீங்கள் என்னத்தால் கட்டுகிறீர்கள்? பொன்னா, வெள்ளியா, கல்லா அல்லது புல் வைக்கோலா?

No comments:

Post a Comment