Friday, 11 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 1

இயேசு ஊன் உருவம் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த போது பல உபதேசங்களை கூறினார். அவைகளில் சில நம் வேதாகமத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களில் உள்ளன. நாம் அவற்றை படித்து அவர் கூறிய உபதேசங்களை பின்பற்றி அவர் கூறியபடியே, அவரைப்போல பரிசுத்த வாழ்க்கை வாழவே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவன் நம் மீது கொண்டுள்ள அன்பு அளப்பெரியது. அந்த அன்பின் நிமித்தமே நாம் எல்லாரும் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறோம். தேவன் அன்பாயிருக்கிறார். பிதாவாகிய தேவன் தன்னுடைய அன்பின் நீள அகல உயர ஆழத்தை நமக்கு வெளிப்படுத்த தன் குமாரனை அனுப்பினார்,

யோவான் 3:16ல் காண்கிறோம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

ஆங்கிலத்தில் இதே வசனம் முதலில் "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்பது முதலில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து பாவ நிவாரண பலியாக மரிப்பதற்காகவே, பாவமே அறியாத, குறையில்லா நிஷ்களங்கமான ஆட்டுக்குட்டியாக வாழ்ந்தவர் இயேசு.

இப்படிப்பட்ட நிஷ்களங்கமான இயேசு பிறந்தவுடன் மரிக்க வைத்து பாவ நிவாரணம் செய்திருக்கலாமே? ஏன் 30 வயது வரை வளர வைத்து, 3-1/2 வருடம் ஊழியம் செய்ய வைத்து பின் அவரை சிலுவையில் கைவிட்டு மரிக்க வைக்க வேண்டும்?

தியானியுங்கள். அடுத்த பதிவில் சில காரணங்களை காணலாம்.

Life of Christ Jesus - Part 1

Jesus when he lived in flesh in this world had told many teachings. Only a few of them we have in the canonised bible, recorded in the 4 Gospels. These are made available to us to read, follow the teachings and live a holy life like Jesus.

God's Love cannot be fathomed. Because of his everlasting love we are still not destroyed completely. God is Love. Hence God, the Father sent his only son to reveal us His love's length, breadth, height and depth. Unfathomable love we have.

In John 3:16 we read "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life."

He was sent to live a Holy life, as a lamb without any blemish, to be sacrificed on the Cross as atonement sacrifice. Jesus lived as a lamb without any blemish.

Why did not LORD god YHWH atone the sins of Mankind the moment Jesus was born? Why he allowed him to grow for 30 years, make him serve for 3-1/2 years and forsake him on the Cross to allow him die?

Meditate on this. See you in the next part.

Thursday, 10 November 2016

Self deed or do as per direction of Father?

LORD will speak to you through John 14.

Jesus said "the words that I speak unto you I speak not of myself: but the Father that dwelleth in me, he doeth the works."

So Jesus' deeds are done by Father. Whatever Father wanted him to perform Jesus did. Thats one of the primary reasons why his ministry withstood the times and still being talked about.

The next verse would have been a whiplash to the disciples. He said "Believe me that I am in the Father, and the Father in me: or else believe me for the very works' sake."

The next verse was a big promise to the believers

Verily, verily, I say unto you, He that believeth on me, the works that I do shall he do also; and greater works than these shall he do; because I go unto my Father.

Greater works than Jesus' works is promised for the believers. 

If we enlist Jesus' deeds we can group them as

He healed sick
He drove demons
He raised dead
He preached
He healed a born blind

and so on

of all deeds, he gave himself on the cross as a sacrificial lamb so that who ever believes in him shall not perish but have eternal life. Author of Salvation is Jesus alone.

He could say "Finished" on the cross, as he accomplished all that were commanded to him to be completed. Jesus dedicated himself to accomplish the will of the Father.


Jesus gave only one command. That's Love. He said
If a man love me, he will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.

The Holy God in Trinity and Triune will make their abode in believer. For that only thing we need to do is to Love Him and Love one another.

The creator of Universe, the one who cannot be contained in the universe and heavens, will make His abode with the person who loves him. What a privilege!

If we say "The Father is in me" and do whatever our self wants to do, how will Father's will be accomplished? We need to give way for the  Holy Ghost, whom the Father had sent in Jesus name. He is capable of accomplishing things which even we could not imagine to accomplish. God is Able.

A Testimony

I was working in Dubai. That timeframe was good for me to grow in Spirit.

One Thursday night, I visited a brother in Christ's residence in Sharjah and we had dinner together. We went to sleep after a small supplication to the Father to accomplish his will through us.

The brother slept once he hit the bed. However I was in spirit the whole night. I am not sure if my flesh was sleeping or alert. In the Spirit I saw a woman in labour. I saw the child had complications with its umbilical chord surrounding its neck. What a state! the umbilical chord which was supposed to feed the baby is acting as a noose! Holy Spirit made me to untangle the umbilical chord. I obeyed.


I was in spirit till the delivery is completed through a Cesarean section. Once the delivery is completed, I came to senses and found that it was morning.

I shared this spiritual journey with the brother. He asked will such this happen? Are you a doctor? then I asked him, isn't my LORD able to do this? He agreed that God is Able.

Friday was holiday and returned to office on Saturday. One of the colleagues distributed sweets to the office co-workers stating that on Thursday night another colleague was blessed with a boy and the delivery happened with great complications. It happened in India.

The child's father returned to Dubai after few days and explained how the doctors lost hope as the baby had the umbilical chord around its neck for long time and a still born baby was a possibility. However after few hours during the scan they found the umbilical chord out of the neck and immediately performed C-Section.

I became stunned when he was explained these. I gave Glory to God. How LORD loves another soul! The child's parents were not believers in Christ. So in secret, I Praised the LORD for his love.

After a few days when I held the Child in my hands, I thanked the LORD profusely, in my heart. This child had come into the world because of the amazing grace of my LORD.

Like this when we allow the LORD to lead us, he performs miracles.

After this incident, many times I have gone in spirit and obeyed what the LORD had commanded. Most of the times, I have not got report of what happened. Whatever may be the case, I accomplished LORD's will, which is my food.

Self deeds will fail you. When we allow the Holy Spirit who had come in Jesus Name and sent by the heavenly Father to accomplish LORD's will, he will lead us to accomplish HIS will as a zealous child and at the end make us state "LORD we accomplished your will"

God is Able. Amen.

சுயமாகச் செய்வதா? பிதா செய்யச் சொல்லி செய்வதா?

யோவான் 14 மூலம் தேவ ஆவியானவர் இன்று பேசுவார்.

இயேசு சொன்னார் "நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."

ஆக, இயேசு செய்த கிரியைகள் எல்லாம் பிதாவானவர் செய்து வந்திருக்கிறார். அதனாலேயே அவரின் ஊழியம் நிலைத்தது. அவரின் ஊழியம் இன்றும் பேசப்படுகிறது.

தொடர்ந்து பேசிய வசனம் சீஷர்களுக்கு சவுக்கடியாக இருந்திருக்கும்.

"நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்."

அதாவது தன்னை நம்பாவிட்டாலும் தான் செய்யும் கிரியைகள், அற்புதங்கள் நிமித்தமாக நம்புங்கள் என்கிறார் இயேசு.

அடுத்த வசனமோ மிகப் பெரிய வாக்குதத்தம்.

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்."

இயேசுவின் விசுவாசிக்கு எப்பேர்பட்ட வாக்குதத்தம். இயேசு செய்த கிரியைகளையும், அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

இயேசுவின் செய்த கிரியைகள் என்னவென்று பட்டியலிட்டோமென்றால் பலர் பலவிதமாக கூறுவர்.

நோய்களை சொஸ்தமாக்கினார்
பிசாசுகளை விரட்டினார்
மரித்தோரை எழுப்பினார்
போதனைகள் பலசெய்தார்
பிறவிக் குருடனை பார்வைப்பெற வைத்தார்

அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லா கிரியைகளை விட, அவர் தன் ஜீவனையே பலியாக கொடுத்தார். யார் யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் நித்திய ஜீவனை அடைவர் என்ற மிகப்பெரிய வாக்குதத்தம் அவருக்குள் இருக்கிறதே. இரட்சிப்பு கொடுக்க வல்லவர் இயேசுவே.

சிலுவையில் "முடிந்தது" என்று கூறும்படி அவர் தனக்கு கட்டளையிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்தார். பிதாவானவர் தன் வாழ்க்கையில் என்ன செய்ய திட்டமிட்டிருந்தாரோ அதை செய்து முடிக்க இயேசு தன் வாழ்க்கையை அர்பணித்தார்.

இயேசு ஒரே கற்பனை தான் கூறுகிறார். அது அன்பு..  "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்."

பிதாவும், இயேசுவும், பரிசுத்த ஆவியும் உங்களில் வாசம் செய்வார்கள். எப்பேர்பட்ட சிலாக்கியம்! அண்டசராசரங்களும் வானங்களும் கொள்ளாத தேவன், நம்மில் வாசம் செய்கிறார்.

அவர் நம்மில் கிரியை செய்ய நாம் செய்ய வேண்டியது, அவரிடம் அன்பு கூறுவதே. அவரை அன்பு கூறுவது போல ஒருவரிலொருவர் அன்பு கூறுவதே. இப்படி அன்பை நாம் வெளிப்படுத்தினால் போதும். பிதாவானவர் நம்மில் கிரியை செய்ய இடம் தர வேண்டும்.

பிதா என்னில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு உங்கள் சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களென்றால் பிதாவின் கிரியை எப்படி நடந்தேறும்? பிதாவின் சித்ததை செய்து முடிக்க இயேசுவின் நாமத்தில் பிதா அனுப்பிய பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை கிரியை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

நமக்கு தெரியாத காரியங்களையும் நம் மூலம் செய்து முடிக்க வல்லவராக இருக்கிறார் கர்த்தர்.

ஒரு சிறிய சாட்சி

நான் துபாயில் வேலை செய்த காலம். ஆவியில் வளர அந்த காலம் எனக்கு மிக நன்றாக இருந்தது. ஒரு வியாழன், ஷார்ஜாவில் ஒரு கிறிஸ்துவிற்குள் சகோதரனின் வீட்டில் இரவு உணவு உட்கொண்டுவிட்டு தூங்கச் சென்றோம். தூங்கும் முன்னர் கர்த்தரின் சமூகத்தில் சென்று அவர் சித்தம் எங்களில் நிறைவேற ஒப்புக் கொடுத்தோம். சகோதரர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். நானோ
அன்றிரவு முழுவதும் ஆவியில் விழித்திருந்தேன். என் மாம்சம் தூங்கியதா இல்லையா தெரியாது. ஆவியில் ஒரு பிள்ளை பேறு நடை பெறுவதைக் கண்டேன். அந்த சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி. அந்த சிசுவிற்கு ஊட்டம் அளிக்க வேண்டிய தொப்புள் கொடியே அதற்கு தூக்கு போட்டது போல சுற்றிக்கொண்டது வியப்பாக இருந்தது. ஆவியானவர் என்னை பணிக்க அந்த தொப்புள் கொடியை மெதுவாக எடுத்து விட்டேன்.

இந்த ஆவியின் செயல் முழுவதும் முடிந்து பிள்ளைப்பேறு சிசேரியன் மூலம் நிறைவேறவும் நினைவு வந்தது. பொழுது விடிந்திருக்கக் கண்டேன்.. உடலில் ஒரு அசதியும் இல்லை. உற்சாகமாக எழுந்தேன். அந்த நிகழ்வை அந்த சகோதரனிடம் பகிர்ந்தேன். அவருக்கு ஆச்சரியம். இப்படியும் நடக்குமா? நீ என்ன டாக்டரா? என்று கேட்டார். கர்த்தரால் முடியும் தானே என்றேன். அவர் ஒப்புக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை விடுமுறை முடிந்து சனிக்கிழமை அலுவலகம் சென்றேன். அங்கு சகஊழியர் ஒருவர் இனிப்பு வழங்கினார். வியாழன் இரவு மற்றொரு சகஊழியருக்கு இந்தியாவில் ஆண்குழந்தை பிறந்ததாகவும், அந்த ஆண்குழந்தை மிகவும் பிரச்சனையான பிரசவம் நடந்து பிறந்ததாகவும் கூறினார்.

குழந்தையின் தந்தை சில நாட்களுக்கு பின் துபாய் வந்தார். வந்தவர் நடைப்பெற்ற பிரசவம் குறித்து மிக ஆச்சரியமாக விளக்கிக் கூறினார். சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி மிக நேரமாக இருந்ததால் குழந்தை இறந்து பிறக்கும் என்று மருத்துவர்கள் கைவிட்டனராம். ஆனால் சில மணிநேரத்திற்கு பிறகு தொப்புள் கொடி தானாகவே கழுத்திலிருந்து அவிழ்ந்ததாம். அவிழ்ந்ததைக் கண்டவுடன் சிசேரியன் செய்தார்களாம்.

அந்த நிகழ்வை கேட்டதும் புல்லரித்துப் போனேன். தேவன் ஒரு ஆத்துமாவை எப்படி நேசிக்கிறார் என்று புரிந்தது. அந்த ஆண்குழந்தையின் பெற்றோர் கிறிஸ்துவை அறியாதவர்களே. கர்த்தரை ஸ்தோத்தரித்து அவருக்கே நான் மகிமை செலுத்தினேன். அந்த ஆண்குழந்தையை சில நாட்கள் கழித்து என் கைகளில் ஏந்தியபோது யாருக்கும் தெரியாமல் என் தேவனை ஸ்தோத்தரித்தேன். என் தேவன் ஆச்சரியமாய் அனுகூலம் செய்து பிறப்பித்த குழந்தையல்லவா!

ஆகவே இது போல ஆவியானவர் உங்களை முழுதுமாக வழிநடத்த ஒப்புக் கொடுக்கும் போது அற்புதங்களை கர்த்தர் செய்கிறார்.

இந்நிகழ்வின் பிறகு இப்படிபட்ட ஆவிக்குரிய காரியங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. பலவற்றிற்கு நிகழ்வின் விளக்கம், சொன்ன சாட்சியின் விளக்கம் போல் வந்ததில்லை. வராவிட்டால் என்ன! என் தேவனின் சித்தத்தை செய்வது தானே என் போஜனம்!

சுயசித்தம் நம்மை வீழ்த்தும். தேவ சித்தத்தை செய்ய இயேசுவின் நாமத்தில் பிதாவானவர் அனுப்பிய ஆவியானவருக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை வழிநடுத்தி பிதாவின் சித்தத்தை நம் வாழ்வில் செய்ய ஒப்புக் கொடுப்போம். நம் வாழ்க்கையிலும் "பிதாவே உம் சித்தத்தை முழுவதுமாக செய்து முடித்தோம்"  என்று சொல்லும் படியாக தேவ ஆவியானவருக்குக் கீழ்படிந்து வைராக்கியமாக தேவ சித்தத்தை செய்யும் பிள்ளைகளாக இருப்போம். ஆமென்.

Wednesday, 9 November 2016

பலமான ஆகாரத்தையல்ல பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்

அன்பான ஒலிவமலை பயனர்களே

இந்த குழுவில் ஆவியானவர் பதிவு செய்யும் பகுதிகள் சிறு பிள்ளைக்கு அளிக்கும் பால் போன்றது. இவைகளில் பல எமக்கு முன்பே தெரிந்திருந்தாலும் அஸ்திவாரம் நல்ல ஸ்திரமானதாக இருக்க நாம் இவைகளை அறிவது நலமே.

மற்றோருக்கு சத்திய ஆவியானவர் சொல்வது

எபிரெயர் 5:12-14

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

Milk not Solid food

Dear MOOCLL members

The articles shared in this forum are rudimentary and practicable in daily life. For the Lord has started giving milk to you, instead of solid food.

If you wonder why you get milk and all these teachings are well known to us, it is always better to go back to the basics and strengthen the foundation.

For many though, this is what spirit of truth declares

Hebrews 5:12-14
For although by this time you should be teachers, you again need to have someone teach you the rudiments of the first principles of the revelations of God. You have come to need milk, and not solid food. For everyone who lives on milk is not experienced in the word of righteousness, for he is a baby. But solid food is for those who are full grown, who by reason of use have their senses exercised to discern good and evil.


ஜீவாத்துமா (வாழ்வுடையோன்).

தேவன் நம்மை படைத்த போது ஜீவாத்துமாவாக படைத்தார். ஆதியாகமத்திலே மனிதனை படைத்த போது, மண்ணை வைத்து ஓர் உருவம் செய்து தன் சுவாசத்தை ஊதினார். மனிதன் ஜீவாத்துமா ஆனான். இப்படி படைத்த தேவன், ஒரு குறிப்பிட்ட கனியை புசிக்காதே என்று கூறியிருந்தார். ஆதாமும் ஏவாளும் கீழ்படியாமல் புசித்ததால் சாவு உலகிற்குள் வந்தது.
சதுசேயர்கள் இயேசுவை உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்க, சோதிக்கும் போது இயேசு தரும் விடையின் முடிவில்
லூக்கா  20:38. ...எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
இயேசு இவ்வுலகில் மாம்சத்தில் ஊழியம் செய்த போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூவரும் உலகப் பிரகாரமான மரித்திருந்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் பெயரை கூறி, ஜீவனுள்ளோர் என்று குறிப்பிட்டார்.

லாசரு, ஐஸ்வர்யவான் கதையிலும் இருவரும் உலகத்திற்கு மரித்து அவர்களின் மாமிச உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களில் லாசருவை பரலோகத்தில் ஆபிரகாம் மடியில் தேவ தாதர் விடுகிறார்கள். ஐஸ்வர்யவானோ நரகத்தில் வேதனைப் படுகிறான். இங்கு மூவருமே சாகாதிருப்பதை கவனிக்க வேண்டும்.

மாமிச உடல் அழிந்தாலும், ஆத்துமா அழியாது இருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்து திரும்ப வரப் போகிறார். அவரவர் செய்த கிரியைக்கு ஏற்றதாக பலனளிப்பார்.

ஆனாலும் மத்தேயு 7ல் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தேயு 7:21-23 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவாகி உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவாகி என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வாழும் மனிதரையும், 'மரித்த' மனிதரையும் நியாயந்தீர்க்க இயேசு விரைவில் வருகிறார். அவர் வரும் போது தேவ பிள்ளைகளாக, பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவர்களாக இருப்போமா?

அவர் நாமத்தினாலே பிசாசை துரத்துவதும், அவர் நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைப்பதும் பிதாவின் சித்தம் இல்லையெனில் அவை அக்கிரமச்செயல்!

ஒர் ஆழ்ந்த கருத்து இந்த வசனத்தில் உள்ளது. தேவனுக்கு ப்ரீதியான வாழ்க்கை வாழுங்கள். எந்த வேலையைத் தொடங்கும் முன் பிதாவின் சித்தம் தானா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை கேட்டு, அவர் வழிநடத்துதலின் படி நடப்பதே நல்லது.

இயேசுவே உயிர்ப்பிக்கிறவர்...

யோவான் 5:21-23
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

சத்திய ஆவியானவர் தாமே உங்களை மேலும் வழிநடத்துவாராக. ஆமென்.

Living being.

God created man as a living being. We read in Genesis that the LORD breathed in life in the form made out of mud and breathed life into him and the man became a living being.

Once the LORD created man he said, you will die if you eat a specific fruit.

Adam and Eve disobeyed and death came into the world.

When the Sadducees testing him on resurrection his reply ends as "For to him all are alive." Read Luke 20

So Abraham, Isaac, Jacob were long 'dead' before Jesus. But Jesus says they are still alive.

Also when he talks about of Lazurus and rich man story, Jesus says Lazurus was left in the Abraham's lap in the heaven and rich man suffering in the hell.

Life is still there in both rich man and Lazurus. Not being a living being in flesh doesn't actually stop from the soul to be alive.

When Jesus returns as the righteous judge, he will reward as per the deeds.

Also Jesus said in Matthew 7:21-23

"Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of heaven, but the one who does the will of my Father who is in heaven. On that day many will say to me, 'Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name?' And then will I declare to them, 'I never knew you; depart from me, you workers of lawlessness.'

A judgement is very much awaiting the people of the world, 'living' or 'dead' for to him all are alive.

There are deep secrets in Jesus' warning.

He also says the demon drivers and mighty work doers in Jesus Name are doing "evil" (Read Matthew 7)

Every child of God MUST be aware what is GOD'S will before they do anything in their life. Ask the Holy Spirit who resides in you,  "Is this what heavenly Father's will for me?"

Do only the Father's will. Casting demons, preaching, prophesy, healing etc., are deeds which will be considered evil, if they are not will of heavenly father.

Live a life that will be pleasing to the LORD and be assured of salvation.

If you live to your will and not accomplish heavenly father's will, no miracles, no demon driving, no prophecy will save you. Be aware of this simple but important truth.

In him there is life. Jesus is a life-giver.

John 5:21-24

For as the Father raises the dead and gives them life, so also the Son gives life to whom he will.

The Father judges no one, but has given all judgment to the Son,

that all may honor the Son, just as they honor the Father. Whoever does not honor the Son does not honor the Father who sent him.

Truly, truly, I say to you, whoever hears my word and believes him who sent me has eternal life. He does not come into judgment, but has passed from death to life.

May the Spirit of God lead you in all Truth.

Currency notes demonetised

Shri Narendra Modi announced today that from midnight tomorrow (9 Oct 2016 00:00 Hours) the 500 and 1000 rupees notes were made illegal to tender.

Even people who possess a few currency notes are panicking. This is because they have their heart are on their worldly treasures.

As Jesus said, store up treasures in the heaven.

This decision has come  suddenly and taken many by surprise. This shows that decisions can be forced by the government at their whim and can make people to bend to their policies.

We all know that the beast will enforce that the people who don't have his mark of 666 cannot do trade.

These occurences are of prophetic significance of the return of our redeemer Jesus.

Come Lord Jesus! Come soon. Amen

செல்லாத நோட்டுக்கள்

இன்றிரவு (8 Oct 2016) 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திரு நரேந்திர மோடி அறிவிப்பு.

இதன் காரணமாக மிகவும் நெருக்கடியான நிலையில் பல மக்கள் உள்ளனர். சில கரன்சி நோட்டுக்களை வைத்துள்ள மக்களும் பதற்றமாக இருக்க காரணம், அவர்களின் இருதயம் அவர்களின் பொக்கிஷம் இருக்கும் இடத்தில் உள்ளது.

இயேசு கிறிஸ்து சொன்ன படியே, பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்.

இந்த முடிவு சடுதியில் வந்ததென மக்கள் கூறுகின்றனர். முடிவுகள் சடுதியில் வரக்கூடியதென்று இந்த நிகழ்வைக் கொண்டு அறியலாம்.

காலம் மிக விரைவில் வருகிறது மக்களே.... பிசாசின் முத்திரையான 666 என்ற இலக்கத்தை ஒப்புக் கொள்ளாதவன் வணிகம் செய்ய முடியாது என்ற நிலை வரும் என்று நம் வேதாகமத்தில் உள்ளது.

தேவன் உங்களையும் என்னையும் முன்குறித்து இரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். முன்குறிக்கப்பட்டும் சத்தியம் அறியாத மக்கள், சத்தியம் அறியும்படி நாம் ஜெபித்து, அவர்களுக்கு ஆவியானவர் வழிநடத்தும் படியே கீழ்படிந்து அவர்களுக்கு சத்தியத்தை அறிவியுங்கள். இவையெல்லாம் நம் மீட்பர்  விரைவில் திரும்ப   வருவதற்கான அறிகுறிகள்.

வாரும் இயேசுவே. விரைவில் வாரும். ஆமென்.

Tuesday, 8 November 2016

Christ Jesus life - Part 7

Do you speak what others want to hear?

Are you speaking what others want to hear? If you are leading such as life, wherein you speak to people what they want to hear, you are leading a life of hypocrisy.

What's the difference between a yesmen who does flattery? No difference.

Jesus did not flatter anyone. We see in scriptures he said, woe to you Pharisees. Even before the governor, Pilate, when Pilate was threatening him "Don't you know I have the authority to put you on the cross?" he replied "Unless it is granted from above you have no authority over me!"

Worthless Servants

Pastors and Ministers of God must closely understand Jesus lifestyle and lead a life just like him.

Let us make a simulation

Holy Spirit makes you to walk on a specific road. On that road you come across a car, which is clearly a government head's convoy. Holy Spirit commissions you to get into the car and preach Gospel. Will you do?

If you do, you are doing the will of God.

Now read Acts 8:25-40. Philip did the will of God. Ethiopian Eunuch was saved. He did not ask, "How can I get into a governors convoy? The soldiers gaurding the convoy would kill me?" He didn not find a lame reason

Jesus says "Without me you can do nothing"

Do you still say, I accomplished, I went there, I preached, I ministered, I evangelised? Changed that I in these statements. Whatever LORD leads you to do, only those things complete them. And then say "We have completed all the commands, your worthless servants LORD"

Let us remember the grace LORD has showered on us daily.

Christ Jesus life - Part 6

Sermon and God's people

Holy Spirit when he delivers sermon through me, often says "You should grasp God's word and understand. It should not be let go as a Bouncer ball ducked by batsman during a Cricket match" During worship time if you are uanble to understand the meaning of  the sermon, sit with the LORD in your personal prayer to get the understanding.

If you duck and leave it as bouncer, whose loss is it? Isn't it like the seeds that were strewn by way side and eaten by birds? For what reason Sermon is there in congregation? Isn't it for the God's people to understand the word of God and utilise it?

One can take only one verse and preach for days. Also in one sermon there can be many scripture references. Preachers, it is not important how you preach. It is important that the people who hear the preaching are benefitted from the sermon. Does the Holy Spirit preach, or your flesh preach?

Jesus during his ministry has told same teachings in 2 or 3 places. However these were delivered for the benefit of people who were there. He did not preach about the same thing to different people in same day. He understood the needs of the people and delivered his sermons. In some places directly and in many places with Parables.

Holy Spirit knows the needs of the people coming to that service. In each worship understanding the need of the people from the Holy Spirit and preaching it is the right way. If a preacher does that, they are doing the will of God. Other sermons will go as bouncers. For this reason I am not in agreement with one sermon for many worship services in a day.

In all the worship time, don;t follow it as a law to preach. Sometimes utilise the time to sing and praise the LORD.

Recently Holy Spirit led me to a church for an evening service. When I arrived the service did not start and I saw the congregation members in prayer. I saw the Church Pastor getting ready for preaching.

I also gave myself to Holy Spirit and started praying. Holy Spirit revealed me something and asked me to tell to the Pastor.  I obeyed the LORD and said what Holy Spirit revealed me. He was little surpised. If Holy Spirit leads like this some may not obey stating that "What if the Pastor thinks who is this fellow to come and say LORD told me this?"

On that day, I obeyed

After few minutes the worship starts. After the worship the sermon heading was much related to what Holy Spirit revealed me and asked me to tell the Pastor. So preachers should be very careful what Jesus wants to preach to the people. When the Spirit of God takes over a sermon, the words become imperishable seed.

May the LORD teach you and lead you further. Amen

Christ Jesus Life - Part 5


Parables in teachings of Jesus

It is written in the gospels that Jesus had preached his teachings predominantly to his Disciples. Nicodemus, the Pharisee who met Jesus privately, is one of the few who heard his teachings and not part of his disciples group.

Both in the Mount sermon recorded in the gospel according to Matthew and the Plains sermon recorded in the Gospel according to Luke, we can observe that Jesus had spoken to his Disciples. Read Matt 5:1-2 and Luke 6:20

When he spoke to the multitude, he spoke in Parables. Why was it required of Son of God to preach in Parables? Just like our modern day evangelists why not he spoke directly about the salvation? He said, Believe in me so that you will have eternal life. What is the reason he said this in the Temple or during festival feasts alone?

People in flesh would come to God with a specific need. They followed the Mosaic law to gather in the temple or synagogues, as a ritual. It is indeed true that they did not seek the Kingdom of God.

When Jesus spoke in Parables his Disciples asked him "Why are you speaking in Parables?" Jesus answers "The secrets of the Kingdom of God are made known to you. For those who are out there, it is hidden and told as Parables"

So, all should get everything was not Jesus' doctrine. Whatever one to be blessed with, one who was chosen by LORD, that blessing will be delivered.

In the Sower Parable, the seeds are same. The sower also did not wantedly put the seeds in rocky places or thorny bush. It is the capability to taje the seed and utilise it. We see even the good people produced 30, 60, 100 as per its capacity.

This is exacly what Paul says in 1 Corinthians 3:10-13

By the grace God has given me, I laid a foundation as a wise builder, and someone else is building on it. But each one should build with care. For no one can lay any foundation other than the one already laid, which is Jesus Christ. If anyone builds on this foundation using gold, silver, costly stones, wood, hay or straw, their work will be shown for what it is, because the Day will bring it to light. It will be revealed with fire, and the fire will test the quality of each person’s work.

What are you building with? Gold? Silver? Wood? Costly Stones or Hay  and Straw?

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 7

கேட்க வேண்டும் என்பதையா பேசுகிறீர்?


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சை கேட்க விரும்புபவர்கள் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை சொல்கிறீர்களா? அப்படி செய்தால் நீங்கள் ஒரு மாய்மால வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

முகஸ்துதி பாடுவோருக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை. 

இயேசு யாருக்கும் முகஸ்துதி செய்யவில்லை. பரிசேயர்களை நோக்கி உங்களுக்கு ஐயோ! என்று கடிந்து கொண்டவர். பிலாத்து தன் அதிகாரத்தை குறிக்கும் விதமாக, "உன்னை சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டு"  என்ற போது, ஆளுகையில் உள்ள பிலாத்துவை நோக்கி "பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய உமக்கு என் மேல் அதிகாரம் இல்லை" என்று கூறுவதைக் காணுங்கள்.

அப்பிரயோஜனமான ஊழியக்காரர்


போதகர்களும், ஊழியம் செய்பவர்களும் மிகவும் உன்னிப்பாக இயேசுவின் வாழ்க்கையை கவனித்து அவரைப் போலவே வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு நிகழ்வை உருவகப் படுத்தி காணலாம்!

உங்களை தேவ ஆவியானவர் ஒரு சாலையில் நடந்து செல் என்று பணிக்கிறார். 

அவ்வழியே ஒரு ஆளுனரின் சீருந்து (கார்) செல்கிறது. அந்தக் காரில் ஏறி சுவிசேஷம் சொல் என்று சொல்கிறார். நீங்கள் செய்வீர்களா?

செய்தால் தேவனுடைய சித்தத்தை செய்தவர் நீங்கள்.

அப்போஸ்தல நடபடிகள் 8:26-40 படியுங்கள். பிலிப்பு தேவ சித்தத்தை செய்தான். எத்தியோப்பிய அண்ணகன் இரட்சிக்கப்பட்டான். அவன் "நான் எப்படி ராஜ பிரதாணியின் வாகனம் அருகே செல்ல முடியும்? அவன் இரதத்தில் உள்ள வீரர்கள் என்னைக் கொன்று போடுவார்களே" என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

இயேசு சொல்கிறார்,  "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது."

நான் இதைச் செய்தேன், அங்கு சென்றேன் பிரசங்கித்தேன், ஊழியம் செய்தேன், சுவிசேஷம் அறிவித்தேன் என்று சொல்கிறீர்களா. அந்த வார்த்தைகளில் நான், றேன், தேன் மாற்றுங்கள். தேவன் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை மட்டுமே செய்து முடியுங்கள். செய்த பின்னர் இயேசு சொன்ன படியே

"உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்"

கர்த்தர் நமக்கு அருளிய கிருபைகளை நாளும் நினைவு கூர்வோம்.  

Monday, 7 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 6

பிரசங்கமும் தேவ ஜனமும்.

ஆவியானவர் என் மூலம் செய்யும் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லும் வாக்கியம் "தேவ வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் தலைக்கு மேல் போடப்படும் பவுன்ஸராக இருந்தால், குனிந்து விடுவது போல, தேவ வார்த்தையை விடக் கூடாது." ஆராதனை வேளையில் புரியவில்லை என்றால் தனி ஜெபத்தில் ஆண்டவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி பவுன்ஸரைப் போல வரும் தேவ வார்த்தையை குனிந்து விட்டுவிட்டால் யாருக்கு நட்டம்? பறவைகள் புசித்துப் போடும் விதையாக தேவ வார்த்தை ஆகிறதே. ஆராதனையில் பிரசங்கம் செய்வது எதற்காக? தேவ வார்த்தை தேவ ஜனத்திற்கு எளிதில் உள்வாங்கி அவற்றை பயன் படுத்தும் படியாகவே அல்லவா? ஒரேயொரு வசனத்தைக் கொண்டு நாள் கணக்காக பிரசங்கம் செய்யலாம். ஒரே பிரசங்கத்தில் பலப்பல வசனங்களை மேற்கோள் காட்டியும் பிரசங்கம் செய்யலாம். போதகர்களே எப்படி பிரசங்கம் செய்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. பிரசங்கம் கேட்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது மிகவும் முக்கியம். தேவ ஆவியானவர் பிரசங்கிக்கிறாரா, அல்லது உங்கள் மாம்சம் பிரசங்கிக்கிறதா?

இயேசு தன் வாழ்நாளில் ஒரே கருத்தை இரண்டு அல்லது மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் இவை யாவும் கேட்கும் மக்கள் பயனுறவே சொல்லி இருக்கிறார். ஒரே நாளில் ஒரே கருத்தைக் குறித்து வெவ்வேறு ஜனங்களுக்கு கூறவில்லை. அவரவரின் தேவையை புரிந்து கொண்டு அந்தப்படியே அவர் பிரசங்கித்தார். பல இடங்களில் வெளிப்படையாகவும், வேறு இடங்களில் உவமைகளாகவும் பிரசங்கித்தார். தேவ ஆவியானவருக்கு அந்தந்த ஆராதனைக்கு வரும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரியும். ஒவ்வொரு ஆராதனை வேளையிலும், தேவ ஆவியானவர் என்ன செய்தி கொடுக்க வேண்டும் என்று இருக்கிறாரோ அந்த செய்தி மட்டும் கொடுப்பவர்களே தேவனுடைய செய்தியை பகிர்கிறார்கள். மற்றவர்களின் பிரசங்கம் பவுன்ஸராக போவதே இயற்கை. இக்காரணத்தினாலேயே ஒரே நாளில் "பல ஆராதனைகள் ஒரே செய்தி" என்ற கோட்பாடில் ஒவ்வாமை.

ஒவ்வொரு ஆராதனைக்கும் தேவ செய்தி பிரசங்கிக்கப் படவேண்டும் என்பதை நியாயப்பிரமாணமாக இல்லாமல், தேவனை ஆராதிப்பதற்கு அந்த வேளையை, பயன்படுத்தி பாடல்கள் பாடலாம். சமீபத்தில் ஒரு சபைக்கு ஆவியானவர் வழிநடத்த சென்றேன். சென்ற போது ஜெப வேளை. ஒவ்வொருவரும் தனி ஜெபமாக ஏறெடுத்துக் கொண்டிருந்தனர். சபை போதகர் அந்த ஜெப வேளையிலே பிரசங்கத்திற்காக ஆயத்தமாவதை கவனித்தேன். நானும் ஆவியானவரிடம் அவ்வேளையை ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன். அப்போது தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி ஒரு காரியத்தை அந்த போதகரிடம் சொல் என்று பணித்தார். தேவ ஆவியானவருக்கு கீழ்படிந்து சென்றேன். போதகரிடம் ஆவியானவர் சொன்னதை சொன்னேன். அவருக்கு சிறிது ஆச்சரியம். அவர் மனதில் "இவன் யார் என்னிடம் வந்து தேவன் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறுவதற்கு" என்று நினைத்து அவரிடம் கூறாமல் விட்டுவிடுவோர் பலர்.

ஆனால் அன்று நடந்தது வேறு. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஆராதனை தொடங்கியது. ஆராதனை முடிந்ததும் பிரசங்கத்தில் தேவ ஆவியானவர் என்ன எனக்கு வெளிப்படுத்தி, போதகருக்கு என்ன சொல்லச் சொன்னாரோ அந்த வார்த்தைகளே பிரசங்கத்தின் தலைப்பு!

ஆகவே, தேவன் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதையே தேவ ஜனத்திற்கு கொண்டு செல்லுங்கள். தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதையே செய்யுங்கள். தேவன் உங்களுக்கு சொல்வதை கீழ்படிந்து செய்வதால், சொல்வதால் அந்த வசனத்தில் ஜீவன் இருக்கும். வசனமே அழியாத விதை. தேவன் தாமே உங்களை மேலும் போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 5

போதனையில் உவமைகள்

இயேசு பெரும்பாலும் தன் போதனைகளை சீஷர்களுக்கு சொன்னதாகவே எழுதப்பட்டிருக்கிறது. பரிசேயன் நிக்கொதெமூ போன்றோர் விதிவிலக்கு.

மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள மலைப் பிரசங்கத்திலும், லூக்கா சுவிசேஷத்தில் உள்ள சமபூமி  பிரசங்கத்திலும் சீஷர்கள் நோக்கியே பிரசங்கம் செய்ததாகக் காண்கிறோம்.

மத்தேயு 5:1-2

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்

லூக்கா 6:20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து

மக்களிடம் பேசும் போதோ உவமைகள் பலவால் போதகம் செய்தார் என்பதைக் காண்கிறோம்.

தேவ குமாரன் உவமைகளால் ஏன் போதிக்க வேண்டும்? 

இப்போது உள்ள சுவிசேஷம் அறிவிப்பவர்கள் போலே நேரடியாக பேசியிருக்கலாமே! என்னை விசுவாசியுங்கள், விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைவீர்கள் என்று ஆலயத்திலும், பண்டிகையிலும் மட்டும் பேச வேண்டியது ஏன்?

மாம்சத்தில் உள்ள மக்கள் ஏதோ ஒரு தேவைக்காகவே தேவனிடத்தில் வருவது வழக்கம். சபை கூடி வருதல் என்பதை நியாயப்பிரமாணமாக செய்தார்களேயன்றி தேவனையும் அவர் ராஜ்யத்தையும் தேட வேண்டும் என்று அவர்கள் வராதது உண்மை.

உவமைகளில் பேசிய போது சீஷர்கள் கேட்கின்றனர், "ஏன் உவமைகளால் பேசுகிறீர்?" இயேசு தரும் பதிலை காணுங்கள்

"தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது."


ஆக எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற கோட்பாடு இயேசுவின் போதனையில் இல்லை. அவனவனுக்கு என்ன அருளப்படவேண்டும் என்று தேவன் முன்குறித்திருக்கிறாரோ அதுவே அருளப்படும். 

விதைப்பான் உவமையில் விதையில் வேறுபாடில்லை. விதைத்த மனுஷகுமாரனும் விதை கெட்டுப்போக வேண்டும் என்று கல்லிலோ முட்களிலோ பொடுவதில்லை, அவனவன் கேட்டு உள்வாங்கி பயன் பெறும் வகையில் தான் வேறுபாடு. நல்ல மண்ணான விசுவாசிகளும் ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்.

இதைத் தான் பவுல் 1 கொரிந்தியர் 3:10-13ல் கூறுகிறான்

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

நீங்கள் என்னத்தால் கட்டுகிறீர்கள்? பொன்னா, வெள்ளியா, கல்லா அல்லது புல் வைக்கோலா?

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 4

தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றென பலர் பிரசங்கிப்பர்.

இயேசு இரண்டு வாக்கியங்களையும் தன் பிரசங்கத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார். நான் படித்த ஒரு வலைப்பதிவில் இயேசு முதலில் பரலோக ராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று சொல்லி ஆரம்பித்தார், பிறகு பெருவாரியான மக்கள் அவ்வசனத்தை ஏற்றுக் கொண்டப் பின்னர் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது என்று திரித்தார். இது ஒரு விற்பனை தந்திரமே என்று குறிப்பிட்டுருந்தார்.

தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றென நீங்களும் கருதினீர்களானால் இந்த மனுஷனுக்கும் உங்களுக்கும் வேறுபாடு என்ன?

தேவ ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தியது யாதெனில், தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டும் வேறு. ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டும் வேறு.

மிகப் பெரிய ஒற்றுமை

தேவனே இரண்டிலும் ஆளுகை செய்கிறார்

உயிர்த்தெழுந்த விசுவாசிகளும், மறுவருகையில் எடுத்துக்கொள்ளப் பட்ட விசுவாசிகளும் பூமியை ஆயிரம் ஆண்டு ஆள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே, அதுவே பரலோக ராஜ்யம். அது சமீபித்திருக்கிறது. ஆட்டுக்குட்டியானவர் நமது ராஜாவாக, விசுவாசிகள் அவரின் ராஜரீகத்தில் பங்குள்ளவர்களாக ராஜரீகம் செய்வோம்.

இந்த ஆயிரம் வருட ஆட்சியில் நம்பிக்கை இல்லாதவர்கள் தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் இரண்டுமே ஒன்றெ கூறுவர்.

தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன?

இயேசு சொல்கிறார், அது இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்றில்லாத படி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே!

விசுவாசிகள் தேவன் ஒருவரே கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜா என்று விசுவாசிக்கும் போது, நம் இருதயங்களில் தேவனுடைய ராஜ்யம் நிலைத்து இருக்கிறது.

"கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்" என்று அறிக்கையிடும் போது அவ்விடத்தில் தேவனுடைய ராஜ்யம் வருகிறது.

ஒவ்வொரு நாளும் கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் என்று அறிக்கை செய்து உங்கள் நாளை தொடங்குங்கள். அவ்வாறு செய்யும் போது தேவனுடைய ராஜ்யத்தில் நீங்கள் வாழுகின்றீர்கள்.

ஆயிரமாண்டு கிறிஸ்துவின் ஆட்சியில் அரசனாக கோலோச்சுவேன் என்றும் அறிக்கை செய்யுங்கள். அப்படி செய்வதால் இயேசுவின் வருகையின் மேல் உள்ள விசுவாசத்தில் நீங்கள் உறுதிப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்களை மேலும் ஆழமான புரிதலுக்குள் வழிநடத்துவாராக. ஆமென்

Life of Christ Jesus - Part 4

Kingdom of God and Kingdom of Heaven are interchangeably used by many in their sermons.

Jesus used both the terms. It became pertinent to touch upon this as I read in one of the articles Jesus said "Kingdom of heaven is near" at the beginning and once the idea was "marketed well" and people started accepting Jesus, he said "Kingdom of God is within you."

If you are one among the many to say that Kingdom of God and Kingdom of Heaven are one and the same, you are agreeing to this man's article that Jesus was using Kingdom of heaven as a Marketing tactic.

The revelation Holy Spirit has given me is, Kingdom of Heaven and Kingdom of God are different, but have similarities.

God rules in both. But in the kingdom of heaven, the believers who are resurrected and believers in flesh who were taken up return to rule the earth. Lord will be the king and we will be the heirs and hence princes and princesses ruling the earth.

This kingdom of heaven is coming soon. The new millennium. Only amilleniels, the ones who does not believe that there's a million year rule of Christ say that the kingdom of God and Kingdom of Heaven are same.

Then what is Kingdom of God?

Kingdom of God is within us. In our hearts he rules. We consider only LORD’S lordship and He is our only king.

When we declare "The LORD reigns" we invoke the Kingdom of God right there.

Start the day with declaring that Lord reigns. Thereby you live in Kingdom of God.

Also declare that you are the chosen and wait for the new millennium rule to be a ruler. Thereby you are declaring your faith to return of Christ as King of Kings.

May LORD BLESS you and lead you to deeper understanding. Amen.

Life of Christ Jesus - Part 3

In Matthew and Mark Gospels Jesus started his ministry with these statements.

Repent, the kingdom of heaven is nigh Matthew 4:17

The time is fulfilled, and the kingdom of God is at hand: repent ye, and believe the gospel. Mark 1:15

In the Gospel of Luke he reads the book of Isaiah and says that the words were fulfilled on that day. The verses are

Luke 4:17-21 And there was delivered unto him the book of the prophet Esaias. And when he had opened the book, he found the place where it was written,The Spirit of the Lord is upon me, because he hath anointed me to preach the gospel to the poor; he hath sent me to heal the brokenhearted, to preach deliverance to the captives, and recovering of sight to the blind, to set at liberty them that are bruised, To preach the acceptable year of the Lord. And he closed the book, and he gave it again to the minister, and sat down. And the eyes of all them that were in the synagogue were fastened on him. And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.

In all these three accounts he started by preaching Gospel. In the Gospel of John the first sermon was when Nicodemus met him in the night. There also he talked about being a born again in water and spirit.

Now, what is the difference between Kingdom of God and Kingdom of Heaven? Are they same? Or are they different?

Let see in the next part.

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 3

மத்தேயு, மாற்கு சுவிசேஷங்களில் இயேசு முதன் முறையாக பிரசங்கித்தவை என்ன தெரியுமா?

மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது மத்தேயு 4:17

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் (மாற்கு 1:15)

லூக்கா சுவிசேஷத்தில் இயேசுவின் முதல் பிரசங்கம் ஏசாயா தீர்க்கதரிசன வார்த்தைகளை படித்து விட்டு

லூக்கா 4:18-21 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

மூன்றிலும் சுவிசேஷம் (நற்செய்தி) கூறியே இயேசு தன் ஊழியத்தை தொடங்கியதாக காண்கிறோம். யோவான் சுவிசேஷத்திலோ முதல் பிரசங்கம் நிக்கதேமூ சந்திப்பில் நடப்பதைக்க் காண்கிறோம்.. அங்கும் மறுபடி பிறத்தல் குறித்த பிரசங்கமே செய்கிறார்.

பரலோக ராஜ்யம், தேவனுடைய ராஜ்யம் என்ன வித்தியாசம்?
இரண்டுமே ஒன்றா? வேறா? அடுத்த பதிவில்

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 2

இயேசு கிறிஸ்து ஏன் 33-1/2 வருடங்கள் வாழ்ந்தார் என்று தியானிக்க கூறியிருந்தேன்.

சில காரணங்களை இப்போது காணலாம்.

1. அவரைக் குறித்த தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டும். ஆய்வாளர்கள் கூறுகின்றனர் பற்பல தீர்க்கதரிசனங்கள் அவர் வாழ்க்கையில் நடந்தேறின. ஆதியாகமம் 3:15ல் தேவன் கூறிய பெண்ணின் வித்து தீர்க்கதரிசனம் முதல், யோவான் ஸ்நானகன் தந்தையான சகரியாவின் அருணோதயம் வரை அவரில் நிறைவேறின.

355 தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றம் இந்த தளத்தில் காண்க. ஆங்கிலத்தில் இருந்தாலும், வேத வசனங்களை தமிழில் படித்தால் நிச்சயம் புரியும்.   http://bit.ly/1tIYobM

மற்றும் இந்த தளத்தில் 16 நிறைவேறிய தீர்க்கதரிசன வாக்குகளின் விளக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. இதனையும் படித்து உணருங்கள். http://bit.ly/2eOCYZ8

2. அவர் எல்லா மனிதர்கள் போலவே சோதிக்கப் பட வேண்டியிருந்தது. பழுதில்லாத ஆட்டுக்குட்டியாக அவர் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. எபிரேயர் 4:15 "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்."

3. தேவன் முன்குறித்த வேளையில், காலம் நிறைவேறின போது பாவ பலியாக தன் குமாரனை ஒப்புக் கொடுத்தார். கலாத்தியர் 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

காலம் நிறைவேறின போது அவர் வந்தாரென்றால், காலம் நிறைவேறின போது தானே ஒப்புக் கொடுக்கப்பட்டார்?

இன்னும் பல காரணங்கள் உள்ளன. தேவ ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்த மன்றாடுங்கள்.

அடுத்த பதிவிலிருந்து இயேசுவின் போதனைகளையும் அவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் காணலாம்.                 

Life of Christ Jesus - Part 2

Some of the reasons why Jesus lived for 33-1/2 years are

1. Prophecies written on him needs to be fulfilled. Starting from the Prophecy LORD god YHWH told in the Genesis 3:15, till the Zechariah's prophecy, the father of John the Baptist got fulfilled in Jesus. Researchers say that as many as 355 Prophecies of Old testament prophets got fulfilled in Jesus' birth. Details of the old testament prophecies can be seen in the following link. http://bit.ly/1tIYobM

It will be a great experience to read the prophecies fulfilled . Please read as many as you can.

Also the following link gives you a detailed account of few of the prophecies. It is very exciting read. http://bit.ly/2eOCYZ8

2. He was tempted just as a normal human beings were tempted. So he has to grow old enough to get that temptations of the world and overcome the temptations, to be a blemish-less lamb. Hebrews 4:15 explains that "For we do not have a high priest who is unable to empathize with our weaknesses, but we have one who has been tempted in every way, just as we are—yet he did not sin"

3. God's appointed time had not come for the sacrifice. Galatians 4:4-5 states "But when the set time had fully come, God sent his Son, born of a woman, born under the law, to redeem those under the law, that we might receive adoption to sonship." So if his coming is appointed, his sacrificial time is also appointed

There are many more reasons. Holy Spirit will lead you into all truth.

From next post we will dwell into teachings of Jesus and practicing them in day to day life, just like Jesus practiced.

Sunday, 6 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 1

இயேசு ஊன் உருவம் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்த போது பல உபதேசங்களை கூறினார். அவைகளில் சில நம் வேதாகமத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களில் உள்ளன. நாம் அவற்றை படித்து அவர் கூறிய உபதேசங்களை பின்பற்றி அவர் கூறியபடியே, அவரைப்போல பரிசுத்த வாழ்க்கை வாழவே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவன் நம் மீது கொண்டுள்ள அன்பு அளப்பெரியது. அந்த அன்பின் நிமித்தமே நாம் எல்லாரும் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறோம். தேவன் அன்பாயிருக்கிறார். பிதாவாகிய தேவன் தன்னுடைய அன்பின் நீள அகல உயர ஆழத்தை நமக்கு வெளிப்படுத்த தன் குமாரனை அனுப்பினார்,

யோவான் 3:16ல் காண்கிறோம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

ஆங்கிலத்தில் இதே வசனம் முதலில் "இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்பது முதலில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து பாவ நிவாரண பலியாக மரிப்பதற்காகவே, பாவமே அறியாத, குறையில்லா நிஷ்களங்கமான ஆட்டுக்குட்டியாக வாழ்ந்தவர் இயேசு.

இப்படிப்பட்ட நிஷ்களங்கமான இயேசு பிறந்தவுடன் மரிக்க வைத்து பாவ நிவாரணம் செய்திருக்கலாமே? ஏன் 30 வயது வரை வளர வைத்து, 3-1/2 வருடம் ஊழியம் செய்ய வைத்து பின் அவரை சிலுவையில் கைவிட்டு மரிக்க வைக்க வேண்டும்?

தியானியுங்கள். அடுத்த பதிவில் சில காரணங்களை காணலாம்.  

Life of Christ Jesus - Part 1


Jesus when he lived in flesh in this world had told many teachings. Only a few of them we have in the canonized bible, recorded in the 4 Gospels. These are made available to us to read, follow the teachings and live a holy life like Jesus.

God's Love cannot be fathomed. Because of his everlasting love we are still not destroyed completely. God is Love. Hence God, the Father sent his only son to reveal us His love's length, breadth, height and depth. Unfathomable love we have.

In John 3:16 we read "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life."

He was sent to live a Holy life, as a lamb without any blemish, to be sacrificed on the Cross as atonement sacrifice. Jesus lived as a lamb without any blemish.

Why did not LORD god YHWH atone the sins of Mankind the moment Jesus was born? Why he allowed him to grow for 30 years, make him serve for 3-1/2 years and forsake him on the Cross to allow him die?

Meditate on this. See you in the next part.

Saturday, 5 November 2016

நவமான பாஷைகள்

இன்றைய சபைகளில், பெரும்பாலும் பெந்தகொஸ்தே, ஏஜி  சார்ந்தவைகளில், அந்நிய பாஷையில் பேசினாலே அபிஷேகம் பெற்றவர்கள் என்றும், நவமான பாஷையில் பேசாதிருந்தால் அபிஷேகம் பெறாதவர்கள் எனக்கூறுவதும் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது.

நான் ஞானஸ்நானம் எடுத்த சபையில் ஞானஸ்நானம் முன்னர் நடத்தும் வகுப்பில் அபிஷேகம் பெறாதவர்கள் அந்நிய பாஷை அபிஷேகத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்நிய பாஷை அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார் அந்த வகுப்பை  எடுத்த மூத்த பெண்மணி.

அபிஷேகம் என்றால் என்ன? வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகளைக் காணலாமா?

நவமான பாஷைகள் பேசுவதை இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கூறுகிறார். மாற்கு 16:17

ஆனால் அது ஒன்றே அடையாளம் ஆகாது. இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவது, சர்ப்பங்களை எடுப்பது; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாமல் இருப்பது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால் வியாதிகள் சொஸ்தமடைவது என்று வேறு அடையாளங்களும் உண்டே.

பெந்தகொஸ்தே நாளில் கூடியிருந்த சீஷர்கள் மேல் பிளவுண்ட அக்கினி நாவுபோல் வந்து, அபிஷேக ஆவியால் சீஷர்கள் நவமான பாஷைகள் பேசுவதை காண்கிறோம். ஆனாலும் சுற்றியிருந்த மக்கள் தம் தம் மொழிகளில் பேசுவதை அறிகிறார்கள். வேற்று மொழி பேசும் மக்களுக்கு அவரவர் மொழியில் சுவிசேஷம் பிரசங்கிக்கின்றார்கள். (அப் 2ம் அதிகாரம் வாசிக்கவும்)

*ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் - தவறான கருத்து*

சிலர் ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் கிடைக்கும் என்று கூறுவர்.

புறஜாதியருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்க பேதுருவை கர்த்தர் அனுப்பிய போது சுவிசேஷத்தை கேட்டவர்கள் ஜெபிக்கும் போது அபிஷேகம் பெற்றதை கண்டதும் பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க தீர்மானிக்கிறான்.(அப் 10:47)

ஆகையால் ஞானஸ்நானம் எடுத்தவர்களே அபிஷேகம் பெறவேண்டும் என்பது ஒரு தவறான பிரசங்கம். ஞானஸ்நானத்திற்கு ஆவியானவரின் அபிஷேகம் தேவை என்று கொள்ளக்கூடாதது எப்படியோ அப்படியே ஞானஸ்நானம் எடுத்தாலே அபிஷேகம் கிடைக்கும் என்றுகொள்ளக்கூடாது.

என் வாழ்வில் ஞானஸ்நானம் எடுக்கும் முன்னரே ஆவியானவரின் அபிஷேகம் கிடைத்தது. (அபிஷேகம் என்றால் என்ன என்றே தெரியாமல் அபிஷேகம் தாரும் தேவனே என்று கேட்டு பெற்றுக் கொண்டவன் நான். முன்னே குறிப்பிட்ட ஞானஸ்நான வகுப்பில் சுமார் 30 பேர் இருந்தனர். இவர்களில் மூவர் மட்டுமே அபிஷேகம் பெற்றிருந்தோம். )

*யாருக்கு அபிஷேகம்?*

ஆவியானவரின் அபிஷேகம் விசுவாசிகளுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்று சிலர் பிரசங்கிப்பர். இதற்கும் ஒரு நிகழ்வின் மூலம் மறுப்பு காணலாம்.

சவுலை ராஜரீகத்தில் இருந்து கர்த்தர் தள்ளி விட்டு தாவீதை அபிஷேகம் செய்ய சாமுவேலை கர்த்தர் பணிக்கிறார். இதன் பின்னர் கோலியாத்தை கொல்கிறான் தாவீது. பின்னர் பாடிய இஸ்ரேல் மக்கள் சவுலை கீழாக பேசி தாவீதை மேன்மையாக பாடுகிறார்கள். அந்த நொடியிலிருந்து சவுல் தாவீதை கொல்ல வகை தேடுகிறான். தாவீது பல முறை தப்பித்து போகிறான். அப்படியே தப்பிக்கும் போது ஒரு முறை சாமுவேல் இருக்கும் இடத்திற்கு தப்பித்து போய் தாவீது தனக்கு நேர்ந்ததை சாமுவேலிடம் கூறுகிறான்.

சவுல் தாவீதை பிடித்து வர வேலையாட்களை அனுப்ப, சாமுவேலும் தாவீதும் ராமாவில் தங்கிருந்த இடத்திற்கு வர, வேலையாட்கள் யாவர் மேலும் தீர்க்கதரிசன ஆவி இறங்க, அவர்களும் தீர்க்கதரிசனங்கள் உரைக்கின்றனர்.

மூன்று முறை வேலையாட்களை அனுப்பினான் சவுல். மும்முறையும் வந்த வேலையாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர்.

கடைசியாக சவுலே வருகிறான் அவன் மேலும் தீர்க்கதரிசன ஆவி இறங்க தன் வஸ்திரத்தை கிழித்துக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்து ஒரு முழு நாள் வஸ்திரம் இல்லாது விழுந்து கிடந்தான். ( 1 சாமுவேல் 19)

ஆக யார் மேல் அபிஷேகம் வர வேண்டும் என்று தேவன் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் அபிஷேகம் வரும். சவுலோ அவன் வேலைக்காரர்களோ பட்சபாதம் இல்லை.

*சபைகளில், ஜெபக்கூட்டங்களில், தனி ஜெபங்களில் அந்நிய பாஷை பேசி ஆராதிப்பது சரியா?*

இது குறித்து பவுல் சொல்வதை காணுங்கள்.

I கொரிந்தியர் 14: 6. மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?

I கொரிந்தியர் 14:9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

I கொரிந்தியர் 14:13. அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.

I கொரிந்தியர் 14:19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

இந்த வசனங்களை ஏன் சபைகள் போதிப்பதில்லை? எவ்வளவு தெளிவான அறிவுரை இவை!  மறைவாக இருக்கின்றதோ என்னவோ? தேவனே அறிவார்!

*அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம் - பவுல்*

I கொரிந்தியர் 14:22. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

I கொரிந்தியர் 14:23. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

ஆகவே தேவ பிள்ளைகளே, ஆவியானவரின் அபிஷேகம் என்று கருதப்படும் அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளம்.

அர்த்தம் சொல்லாத அந்நிய பாஷை, வீணாக அல்லவோ இருக்கிறது? கருத்தே தெரியாமல் ஏதோ ஒரு பாஷையில் மற்றவர் கேட்க உரைப்பது எத்தகைய பலனைக் கொடுக்கும்?

*என் வாழ்வில் அந்நிய பாஷைகள்*

ஆவியில் நான் ஜெபிக்கும் போது நவமான பாஷைகளை தேவன் எனக்கு அருளினால், அந்த அந்நிய பாஷைகளின் அர்த்தத்தையும் விளக்க தேவன் வல்லவராயிருக்கிறார். அப்படியில்லாமல் என் தனி ஜெபத்தில் அந்நிய பாஷையில் நிரப்பி பேசவைத்து எனக்கு அர்த்தம் புரியாமல் இருந்தால்,  ஒரே காரணம் தான் இருக்க முடியும். எனக்கு தெரியத் தேவையில்லாத ஏதோ ஒன்றைக் குறித்து ஆவியானவர் என் மூலமாக ஜெபிக்கிறார்.

*பேசிய வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசுவது*

பேசிய வார்த்தைகளை நினைவில் கொண்டு பேசுவதும் தவறு. ஏனென்றால், தேவன் என்ன காரியத்திற்காக பேச வைத்தாரோ அதே காரியம் ஒவ்வொரு முறையும் பேச வைப்பாரா என்பதை நிதானித்தால், பேசுவது ஆவியானவரா அல்லது மாம்சமா என்பது விளங்கும். மாம்சத்தில் பேசும் அந்நிய பாஷை உளறலே தவிர வேறு இல்லை. இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபத்தில் வீண் வார்த்தையினால் அலப்பாதிருங்கள்.

*சபை ஆராதனைகளில் அந்நிய பாஷை*

சில விசுவாசிகள் அந்நிய பாஷை பேசாது இருந்தோம் என்றால் சபையார் அபிஷேகம் பெறாதவன் என்று என்னை நினைப்பார்கள் என்று தவறாக நினைத்து யாரோ பேசிய அந்நிய பாஷையை தானும் பேச முயலுவதுண்டு. இது எவ்வகையில் அந்நிய பாஷை அபிஷேகம்? சில சபைகளில் ஆராதனை வேளைகளில் அந்நிய பாஷை பேசி தேவனை ஆராதனை செய்யுங்கள் என்றும் கூறுகின்றனர். இதுவும் ஒரு வகையில் தவறானதே.

I கொரிந்தியர் 14: 27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

I கொரிந்தியர் 14:28. அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.

எவ்வளவு சபைகளில், ஜெபக்கூட்டங்களில் அந்நிய பாஷைகளை பேசி அர்த்தத்தை சொல்கிறார்கள்?

*அந்நிய பாஷை வரத்திலும் சிறந்த பல வரங்கள் உண்டு.*

அந்நிய பாஷை மட்டுமே அபிஷேகம் என்று கொள்ளாதிருக்கக் கடவோம்.

தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்தி அந்நிய பாஷையோ, தீர்க்கதரிசனமோ உரைக்க வைத்தால், தேவனுடைய மகிமைக்கென கீழ்படியுங்கள். எங்கே உங்களை பேச வைக்கிறாரோ, அங்கே அதின் அர்த்தத்தையும் வெளிப்படுத்த நீங்கள் தேவனை மன்றாடுங்கள்.

ஆனாலும் தீர்க்கதரிசனமோ, அந்நியபாஷையோ, பிரசங்கமோ, அசுத்த ஆவிகளை துரத்துவதோ, இவை மட்டுமே வரமென்று எண்ணாதிருங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
[02/11 7:45 AM] Sai Giridhar: Many of you may be wondering why this group is bilingual, when all of the members in the group know to read Tamil. It is imperative to explain the LORD's plan.

This group is on Facebook and the reach of Facebook is worldwide. Already there are 2 international likes in the facebook, one from Africa and another from America. For the LORD’S word should reach as many Children as possible, Holy Spirit commissioned me to create this group bilingual. May these posts reach as many Lord's Children as possible. Let's Pray that LORD’S will be done. AMEN

இந்த குழுவில் உள்ளோர் பெரும்பாலும் தமிழ் படிக்க தெரிந்தவராக இருக்க ஏன் இந்தக் குழு இருமொழி குழுவாக ஏற்படுத்தி ஒவ்வொரு பதிவும் இருமொழிகளில் பதிவிடுகிற அவசியம் என்ன என்று நினைக்கிறீர்களா?

அதற்கான விடை... இந்த குழு Facebook தளத்திலும் உள்ளது. Facebook பக்கத்தின் வட்டணிக்கை மிகுதி. ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் தலா ஓரு பயனர் இருக்கிறார்கள். ஆகவே ஆவியானவர் வழிநடத்துதலின் ஆச்சரியம்  என்ன என்று இப்போது அறிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு தேவ பிள்ளைகளுக்கு இந்த பதிவுகள் பயன்பெற வேண்டுமோ அவ்வளவு பேருக்கும் இந்த பதிவுகள் போய் சேரும்படியாக தேவன் வடிவமைத்தது ஆச்சரியமே. தேவ சித்தம் நிறைவேற நாம் அனைவரும் ஜெபிப்போம்.