Thursday, 20 October 2016

Cardinal rules of Christian Life - Part 2

Cardinal rules of Christian Life - Part 2
கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்றியமையாதவை  - பகுதி 2

In the last post we saw that Hearing the will of God is the First Cardinal rule. When God speaks to us, he would speak to us with great clarity and probably show us what needs to be done, just he shew Jesus.

முந்தைய பதிவில் நாம் தேவனுடைய சித்தம் என்ன என்று கேட்பதே முதல் இன்றியமையாத செயல் என்று கண்டோம். தேவன் நம்மொடே பேசும் போது மிகத் தெளிவாக பேசுவார். நாம் காத்திருந்தால், இயேசுவிற்கு செய்துக் காட்டியது போலே செய்துக் காட்டுவார்.

Thus when we hear and / or see what LORD is wanting us do, we should accept it as it is. Atleast accept it as much as possible. Remember the vision Apostle John had in the Patmos Island. He saw the end of times as a series of vision and he was asked to record these visions. We all know that he, recorded the words given Holy Spirit. Many of the prophecies are yet to be fulfilled and they are sealed.

தேவனுடைய சித்தத்தை நாம் கேட்கும் போதும், காணும் போதும், கேட்டு, கண்ட படியே அதை ஏற்றுக்
கொள்ள வேண்டும். குறைந்தது நம்மால் முடிந்த வரையில் மனதில் வாங்குவது அவசியம்.
அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவில் ஆவிக்குள்ளான போது தான் கண்டு, கேட்ட கடைசி
காலங்களை குறித்த தரிசனங்களை ஆவியானவர் சொன்ன படியே எழுதியிருப்பதை அறிவோம். அதிலுள்ள
பல தீர்க்கதரிசனங்கள் இன்னும் நிறைவேற வேண்டியவை. முத்திதிக்கப் பட்டவை

Few of us doubt by what we perceive and if it is against our conviction and beliefs. For Example, Some of us
believe that our LORD is gracious and will not punish people in the age of grace. So when a vision is shown to us that there is going to be a upheaval where few thousand people get killed, we immediately think it is not from the LORD. We conclude that LORD doesn't have heart to kill such multitude. Some of us escape from that vision like the Prophet Jonas.

நம்மில் சிலர் தரிசனங்களை கண்டவுடன் அந்த தரிசனம் நாம் நம்பும் நம்பிக்ககைக்கு எதிரானதாக இருப்பின் அது தேவனிடமிருந்து வந்ததா என்று ஆராய்கிறோம். எடுத்துக்காட்டாக, தேவன் ஒரு பேரழிவை நம் தரிசனத்தில் காண்பித்தால், தேவன் மிக கருணையுள்ளவர், இப்படி பேரழிவை கிருபையின் காலத்தில் அவர் செய்ய மாட்டார் என்று நினைக்கிறோம், மேலும் சிலர், அந்த தரிசனத்தில் இருந்து யோனா ஓடியதைப் போன்று ஓடுகிறோம்.

Doubting is not right in the LORD's will.  We saw how Zechariah doubted and was mute till the prophecy of John the Baptist was fulfilled. However LORD allows certain people to ask for signs, to reaffirm if that was LORD who spake. Gideon, Hezekiah being classic examples.

தேவனுடைய சித்தத்தை சந்தேகிப்பது தவறு. நாம் சகரியாவின் நிகழ்வில் கண்டோம். சந்தேகித்ததனால் வார்த்தை நிறைவேறும் நாள்வரையில் ஊமையாக இருந்தான். ஆயினும் சில வேளைகளில் தேவன் சிலருக்கு தான் பேசியதை உறுதிப்படுத்த அடையாளங்களை கொடுப்பதுண்டு. கிதியோனும், எசேக்கியா ராஜாவும் இவ்வகை நிகழ்வுகளுக்கு சிறந்த உதாரணங்கள்.

What we need to do is Believe! Nothing short of believing. If you want LORD to reaffirm, ask for the affirmations. However LORD doesn't like to give signs all the times. He expects us to have a strong belief in him, that we should stop unbeleieving and ask for signs all the times. Remember Jesus rebuking Pharisees who asked him for signs. Not once but atleast twice he rebuked them as adulterous generation.

நாம் செய்யவேண்டியது ஒன்றே! விசுவாசிப்பது!. விசுவாசத்தை உறுதிப்படுத்த அடையாளங்களை கேட்கலாம். ஆயினும் கர்த்தர் எல்லா சமயங்களிலும் அடையாளங்களை கொடுப்பதில்லை. நாம் விசுவாசத்தில் வளர்ந்து சிறிதளவும் அவிசுவாசம் இல்லாது இருப்பதே தெவனுக்கு ப்ரீதியான காரியம். நினைவில் கொள்ளுங்கள், பரிசேயர் குறைந்தது இருமுறை இயேசுவை அடையாளம் கேட்டபோது அவர்களை விபச்சார சந்ததியார் என்று கடிந்து கொள்ளுகிறார்.

Hear the will of God and Believe in whatever LORD has spoken to you. Our LORD foretells. Just as he foretells Abraham and see what Abraham did in the case of Sodom and Gomorrah. Abraham intercedes in Prayer. LORD listens to his intercession six times. However there were not even 10 righteous in these Cities so LORD destroys. Ask the Holy Spirit if you need to intercede, if yes, intercede.

தேவ சித்தத்தை கேட்டு, அதை விசுவாசியுங்கள். தேவன் என்ன சொன்னாலும் விசுவாசியுங்கள். நம் தேவன் பல நேரங்களில் வரும் காரியத்தை முன்னறிவிக்கும் தேவனாக இருக்கிறார். ஆபிரகாமுக்கு சோதோம் கொமொரா அழிக்கப்போவதை கூறுகிறார். ஆபிரகாம் உடனே தேவனிடம் மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுக்கிறான். ஆறு முறை மன்றாட்டு ஜெபத்தை கேட்கிறார். பத்து நீதிமான்கள் கூட அந்த நகரங்களில் இல்லாத நிலையிலே அவர் அந்த நகரங்களை அழிக்கிறார். தேவ ஆவியானவர் நம்முள் இருக்கிறார். தரிசனம் கண்டதும் கேளுங்கள். மன்றாட்டு ஜெபம் ஏறெடுக்க வேண்டுமெனில், மன்றாட்டு ஜெபம் ஏறெடுங்கள்.

The second cardinal rule is thus, Beleive in the LORD. Whatever he has spoken to you or shown you. Not an ounce of doubt. If you need to grow in faith, ask the LORD for signs. However not each and every time. Grow in faith as the day goes by.

இரண்டாவது இன்றியமையாத குணம் விசுவாசம். தேவன் உங்களுக்கு கூறிய, காட்டிய தரிசனங்களை விசுவாசியுங்கள். விசுவாசத்தில் குறைவுற்றவராய் இருப்பின், அடையாளங்களை கேட்கலாம். ஒவ்வொரு முறையும் அடையாளம் கேட்காதிருங்கள். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, விசுவாசத்தில் உறுதிப்படுங்கள்.

May the LORD teach you further and lead you in HIS will. Amen
கர்த்தர் உங்களை மேலும் போதித்து தம் சித்தத்தின்படி வழிநடத்துவாராக. ஆமென்

No comments:

Post a Comment